Search This Blog

Friday, January 22, 2010

உடல் நலம்

உடல் நலம் :

கை கால்களில் சிறிய கட்டி இருந்தால்:



சுக்கு,மிளகு வேப்பிலை, மஞ்சள் இவை அனைத்தையும் அரைத்து சூடு செய்து ஒத்திடம் கொடுத்து வந்தால் கட்டி கரைந்து போகும்.

Wednesday, January 20, 2010

அன்மீக சிந்தனைகள்

ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரம்:



" பறவை ஆரம்பத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் பறவையாகி மீண்டும் முட்டையிட ஆரம்பிக்கிறது.



அதுபோல மனித இனமும் கருவாகி, உருவாகி, மகனாகி, மகளாகி, மனைவியாகி, கணவனாகி, தாயாகி, தந்தையாகி, பாட்டியாகி, பாட்டனாகி இப்படியே வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது.



இந்த இடைவெளிக் காலத்தில் மனிதன் நல்ல மனமும், நல்ல குணமும் பெற்று நல்லது கெட்டது தெரிந்து வாழ வேண்டும்.



மிருகக் குணம், பிசாசுக்குணம் இல்லாமல் வாழ்வது சிறந்தது."

அன்மீக சிந்தனைகள்

ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரம்:



" பறவை ஆரம்பத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் பறவையாகி மீண்டும் முட்டையிட ஆரம்பிக்கிறது.



அதுபோல மனித இனமும் கருவாகி, உருவாகி, மகனாகி, மகளாகி, மனைவியாகி, கணவனாகி, தாயாகி, தந்தையாகி, பாட்டியாகி, பாட்டனாகி இப்படியே வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது.



இந்த இடைவெளிக் காலத்தில் மனிதன் நல்ல மனமும், நல்ல குணமும் பெற்று நல்லது கெட்டது தெரிந்து வாழ வேண்டும்.



மிருகக் குணம், பிசாசுக்குணம் இல்லாமல் வாழ்வது சிறந்தது."

அன்மீக சிந்தனைகள்

உலகம் கலகலப்பாக மாற....



"இன்றைய உலகம் சலசலப்பாகவும் சஞ்சலமாகவும் இருந்து கொண்டிருக்கிறது. சல சலப்பு இருக்கக் கூடாது. கல கலப்பு இருக்க வேண்டும். கலகலப்பாக உலகம் மாறவேண்டுமானால் உலக மக்கள் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும்."

உடல் நலம்

குளிர்சாதனப் பெட்டியில் எதையும் வைத்துச் சாப்பிடக் கூடாது.
வாழைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது
பழைய உணவு முறையே நல்லது. காபி, டீ உடலுக்கு நல்லது அல்ல.
உப்பு,எண்ணெய்,புளி இவற்றை அதிகம் கூடியவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
புதினா, கொத்துமல்லி, வேப்பிலை, துளசி ஆகியவற்றைக் காயவைத்துக் கஷாயம் வைத்துச் சாப்பிடவேண்டும்.
சர்க்கரையைத் தவிர்த்து அதற்குப் பதிலாகப் பனை வெல்லம்,பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
சோளக்களி, வரகுசோறு, கேழ்வரகுகளி இவற்றைச்
சாப்பிட்டால் நோய்கள் வராது

Friday, January 8, 2010

ஆன்மீக சிந்தனைகள்

" ஆற்றில் பலவகை மீன்கள் வாழ்கின்றன. அதில் வெள்ளம் வந்து அடித்துக்கொண்டு போகும் பொழுது வழியிலேயே மனிதர்கள் அவற்றைப் பிடித்துச் கொள்கிறார்கள்; தின்று விடுகிறார்கள்.



குளத்து மீனுக்குக் குளத்தில் இருக்கும் வரை குளத்தின் மகிமை தெரிவதில்லை. குளத்தை விட்டு வெளியே தரைக்கு வந்தவுடன் அழிந்து போகிறது.



அதுபோல ஆன்மிகத்தில் இருக்கும் வரை அதன் மகிமை தெரிவதில்லை. அதை விட்டு வெளியே வந்த பிறகுதான் அதன் மகிமை புரியும்."










உடல் நலம்:



நோய்கள் வராமல் தடுக்க:


கண்டங்கத்திரிக்காய், முருங்கைக்காய், முருங்கைக் கீரை
ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Wednesday, January 6, 2010

ஆன்மீக சிந்தனைகள்

பேருக்கும்,புகழுக்கும் அடிமைப்படாதே

வெற்றியோ,தோல்வியோ கவலைப்படாதே
உங்களிடையே நல்ல எண்ணங்களே ஓங்கி வளர வேண்டும். அவ்வாறு வளர்ந்தால் உங்கட்கு அமைதியும், நிம்மதியும் கிடைக்கும். உங்களிடையே போட்டியும் பொறாமையும் ஓங்கியிருந்தால் அமைதியும் கிடைக்காது நிம்மதியும் கிடைக்காது.



இயற்கை யாருக்கும் சொந்தமல்ல. நீ பெற்ற பிள்ளையே உனக்குச் சொந்த மல்ல. அப்படியிருக்கும்போது உங்களிடையே போட்டிகள் ஏன்? பொறாமைகள் ஏன்?







உடல் நலம்:



நோய்கள் வராமல் தடுக்க:


உப்பில்லாமல் கஞ்சியை வாரம் இரண்டு முறை சாப்பிட வேண்டும்.








------------------------------------------------------------******---------------------------------------------------

உள்ளத்தைப் பக்குவப் படுத்து:

உள்ளத்தைப் பக்குவப் படுத்து:



" கடல் நீர் உப்பாகவே இருந்தாலும் அதனைச் சமையலுக்குப் பயன்படுத்த முடியாது. உப்பளங்களில் கடல் நீரைப் பாய்ச்சிப் பக்குவப் படுத்தி உப்பாக எடுத்த பிறகே சமையலுக்குப் பயன்படுத்தாலும். அதுபோல உங்கள் உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டு வந்தால் தான் ஆன்மிகத்தில் முன்னேற முடியும்."


உடல் நலம்:



நோய்கள் வராமல் தடுக்க:


பாகற்காய், கோவைக்காய், பூண்டு,மிளகு,இவற்றை ஜூசாகவோ
அல்லது கசாயமாகவோ வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் எந்த
நோயும் வராது.

2010ல் செய்யவேண்டியவை ஆரோக்கியம் / உடல் நலம்

--------------------------------------------------------------------------------

2010ல் செய்யவேண்டியவை
ஆரோக்கியம் / உடல் நலம்



1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. தியானம், யோகா மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

சமூகம்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

வாழ்க்கை

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.



--------------------------------------------------------------------------------

Saturday, January 2, 2010